கோத்தபாயவை அவர் நாட்டுக்கு வழங்கிய சேவை அடிப்படையில் தெரிவு செய்யவேண்டும் – மஹிந்த
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபய ராஜபக்சவை அவர் நாட்டுக்கு வழங்கிய சேவையை கருத்திலெடுத்து ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கலாமா வேண்டாமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார்
தேயிலை மற்றும் ரப்பர் மற்றும் சிறு ஏற்றுமதி பயிர்களை பயிரிடுவோர் ஏற்பாடு செய்த மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
கோட்டபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் இந்த நாட்டுக்கு அற்புதமான சேவையை வழங்கினார். அவர் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டால் இதே மாதிரியான சேவையை இந்த நாட்டுக்கு வழங்குவார், இதனை மக்கள் அவரிடம் இருந்து எதிர்பார்க்கமுடியும் என்று கூறினார்