கோத்தபாயவுடன் கைகோர்க்கவுள்ள முரளீதரன் ?
ஷங்கிரி-ல ஹோட்டலில் இடம்பெறவுள்ள இளைஞர் மகாநாடு ஒன்றில் முத்தையா முரளீதன பங்குபற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வய்த்தாகம அமைப்பு நடத்தவுள்ள இந்த இளைஞர் மகாநாடு ஷங்கிரி-ல ஹோட்டலில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பானது ஜனதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவால் தலைமை தாங்கி நடத்தப்படும் ஒரு அமைப்பாகும். இதில் முரளீதரன் பங்குபற்றுவதன் மூலம் அவரும் கோத்தபாயவின் பக்கம் செல்லவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரிகின்றது. கடந்த காலங்களிலும் அவர் மஹிந்த ராஜபக்ச ஆதரவு நிலைப்படடையே எடுத்திருந்ததுடன், பிரித்தானிய பிரதமர் இலங்கை வந்தபொழுது காணாமல் போன அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இவரின் மஹிந்த ஆதரவு நிலை, இவரது சகோதரரின் சடடவிரோத எதனோல் இறக்குமதியுடன் தொடர்புபட்டது என்று கடந்த காலங்களில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது