கோத்தபய -ஹக்கீம் தொலைபேசி உரையாடல் கூட்டணிக்குள் இழுக்க முயற்சி ?
முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டபய ராஜபக்ஷ , இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுஃப் ஹக்கீமுடன் தொலைபேசியில் உரையாடியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
நேற்றையதினம் இடம்பெற்ற உரையாடலின் பொழுது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்ததுடன் , அமைச்சர் ஹக்கீம் , கிளப்பிய ராஜபக்சவுக்கு வாழ்த்துக்களை கூறியதாகவும் அந்த தகவல் தெரிவிக்கின்றது. சுதந்திர கட்சியுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக செல்வதால், கோத்தபாயவின் பக்கம் மற்றய கட்சிகளின் பக்கம் திரும்பியுள்ளதாக அறியக்கிடக்கின்றது
முஸ்லீம் காங்கிரஸ் தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியில் உள்ளத்துடன் , கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் , ஐக்கிய தேசிய கட்சியின் . தலைமையிலான கூட்டணிகளால் களமிறக்கப்பட்ட வேட்பாளர்களையே ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது .