கோதுமை மாவின் விலையை ஒருபோதும் மீண்டும் குறைக்கப்போவதில்லை-ப்றீமா நிறுவனம்
கோதுமை மாவின் விலையை ஒருபோதும் மீண்டும் குறைக்கப்போவதில்லை என ப்றீமா நிறுவனம் அதன் விற்பனை முகவர்களுக்கு அறிவித்துள்ளது. அதிக விலையில் கோதுமை மாவினை விற்பனை செய்த 200 இற்கும் அதிகமான வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளதை தொடர்ந்தே இந்த அறிவிப்பை ப்றீமா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 5 ரூபா 50 சதத்தினால் ப்றீமா நிறுவனம் அதிகரித்திருந்தது .கோதுமை மாவின் ஒரு கிலோவுக்கான சில்லறை விலை 87 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த நிறுவனம் விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளது .
கோதுமை மாவின் விலையை குறைப்பதற்கு நேற்று இடம்பெற்ற வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான கூட்டத்தில் ப்றீமாநிறுவனம் இணங்கியதாக விவசாயத்துறை அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே மீண்டும் இந்த அறிவிப்பை ப்றீமா நிறுவனம் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது