கோதபய ராஜபக்ஷ தோற்கடிப்பதற்கு மிகவும் எளிதான வேட்பாளர்-லட்சுமன் கிரியெல்லா
பொது ஜன பெரமுன கூட்டணி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபய ராஜபக்ஷ ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலாக இருக்க மாட்டார் என்று அமைச்சர் லட்சுமன் கிரியெல்லா கூறினார்.கண்டியில் நடந்த ஒரு விழாவுக்குப் பிறகு அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்
ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்த வரையில் , கோத்தபய ராஜபக்ஷ தோற்கடிப்பதற்கு மிகவும் எளிதான வேட்பாளர். முந்தைய ஜனாதிபதித் தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்ஷவைத் தோற்கடிக்க ஐக்கிய தேசிய கட் சி தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.