கோட்டா சார்பில் இன்று கட்டுப்பணம்!! -தேர்தலுக்கான தீவிர செயற்பாட்டில் மஹிந்த அணி-
கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் இன்று மதியம் தேர்தல் ஆணைக்குழுவில் செலுத்த உள்ளனர்.
கட்டுப்பணத்தை செலுத்துவதன் மூலம் கோத்தபாய தேர்தலில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது மேலும் உறுதியாகியுள்ளதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்கள் ஏற்கனவே கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
இலங்கை சோசலிசக் கட்சியின் சார்பில் கலாநிதி அஜந்தா பெரேரா, சுயாதீன கட்சியின் சார்பில் ஜயந்த கெட்டகொட, சுயேட்சை வேட்பாளர் சிறிபால அமரசிங்க ஆகியோர் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.