Sat. May 16th, 2026

கோட்டா எப்படிப்பட்டவர்? -சொல்கிறார் மஹிந்த-

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச அதிகம் பேசுபவரல்ல ஆனால் செயற்திறன் மிக்கவர் என நாட்டின் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கோத்தபாய ராஜபக்சகுறித்து எதிர்கட்சிகள் பொய்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கோட்டா மோசமானவரில்லை. மக்களே கோத்தபாய ராஜபக்சவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஏற்கனவே தீர்மானித்துவிட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கட்சியினர் சித்தரிப்பது போல கோட்டாபாய ராஜபக்ச மோசமான மனிதரில்லை அவர் செயற்திறன் மிக்கவர் அதிகம் பேசமாட்டார் அமைதியாக செயற்படுபவர் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் ஜனாதிபதியாக பதவி வகித்தால் – பிரதமராக அதிக அனுபவமுள்ள நான் பிரதமராக பதவி வகித்தால் நாங்கள் அனைவரும் இணைந்து மக்களிற்கு என்ன தற்போது தேவையோ அதனை வழங்க முடியும் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது சட்டமொழுங்கில்லை ஜனநாயகம் இல்லை தேர்தல்களும் இல்லை எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாங்கள் இலங்கைக்கு பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் வழங்குவோம் என்பதும் இந்தியாவுடன் நல்லுறவுகளை உறுதி செய்வோம் என்பதும் புதுடில்லிக்கு தெரியும் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed