கோட்டா ஆட்சியில் அரசியல் தீர்வு இல்லை என்றே தோன்றுகிறது! சுமந்திரன் கவலை..
கோட்டபாய அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கும்போது அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு இல்லை என தோன்றுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட உடனேயே
அவருக்கு ஒருசில விடயங்களை நினைவுப்படுத்தியிருக்கிறோம். ஜனாதிபதிக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை.
எனவே குறித்த மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட வேண்டுமென நாம் பகிரங்கமாக ஜனாதிபதிக்கு தெரிவித்திருந்தோம். ஆனாலும் அவர் இதுவரையில் எந்தவிதமான பதிலையும் வழங்கவில்லை.
இதனூடாக அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. மேலும் ஜனாதிபதி இவ்விடயத்தை கவனத்தில் எடுக்கமாட்டாரென தோன்றுகின்றது.
மேலும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெளிமாவட்டங்களில் போட்டியிடுவதுத் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம் இன்னும் தீர்மானம் எதனையும் நாம் எடுக்கவில்லை.
இதேவேளை கொழும்பில் போட்டியிட்டால் மனோவுக்கு இரண்டு வகையில் தாக்கம் செலுத்தும். ஒன்று அவரின் வெற்றி வாய்ப்பை அது குறைக்கலாம் அல்லது அவரும்
நாங்களும் இணங்கி வியூகம் அமைத்து போட்டியிட்டால், கொழும்பில் அவரது வெற்றி வாய்ப்பைக் குறைக்காமலும், இன்னொரு தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளவும் முடியும்
எனத் தெரிவித்துள்ளார்.