Thu. Aug 13th, 2026

கோட்டாவே ஜனாதிபதி வேட்பாளர்!! -மஹிந்த இன்று அறிவிப்பார்-

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவை, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இன்று ஞாயிற்றுக் கிழமை அறிவிக்கவுள்ளார் என்று கோட்டாபயவின் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், ஒரு வார காலத்துக்கு கோட்டாபய ராஜபக்ச நாடு முழுவதிலும் உள்ள மத வழிபாட்டு இடங்களுக்குச் செல்லவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய மாநாட்டில், அக்கட்சியின் தலைமைத்துவத்தை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கவுள்ள மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பையும் வெளியிடவுள்ளார்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான உதவியாளர்கள், அவரது ஜனாதிபதித் தேர்தலுக்கான கொள்கை அறிக்கையைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed