கோட்டாவின் வழக்கு பிற்போடப்பட்டது!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், பொதுஜன பரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை விடுவிக்கும் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவு நீதவான் நீதிமன்றத்திற்கு கிடைக்கவில்லை என்பதனால் வழக்கு விசாரணை பிற்போடப்பட்டுள்ளது.
எவன்கார்ட் வழக்கில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் 7 பேர் விடுதலை செய்யப்பட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் செப்டெம்பர் 12 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது.
எனினும் அது தொடர்பான ஆவணங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் அதனால் வழக்கு செப்டெம்பர் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.