Sat. Sep 23rd, 2023

கோட்டாவின் நியமனம் மாறாது!! -மஹிந்த-

கோட்டாபய ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்டதில் இனி எந்த மாற்றங்களும் நிகழாது என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு – பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தேசிய மாணிக்க மற்றும் ஆபரண கண்காட்சி திறக்கப்பட்ட பின்னர்

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார். அவர் மேலும் கூறுகையில், சுதந்திரக் கட்சியுடன் பொதுஜன பெரமுன இணைவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இரு கட்சிகளின் அடையாளத்தையும் பாதுகாத்து எமது ஜனாதிபதி வேட்பாளரை வெல்ல வைக்க விரும்புகிறோம்.

ஆயினும்கூட, ஸ்ரீ.ல.சு.க. உடனான எங்கள் கலந்துரையாடல்களும்,கோட்டாபய ராஜபக்ஷவுடன் அவர்கள் நடத்திய கலந்துரையாடல்களும் மிகவும் வெற்றிகரமாக உள்ளன.

இந்த அரசாங்கம் ஏற்கனவே கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பயந்துள்ளது . அதனால்தான் எங்களை தாக்கும் வேலைகளை செய்கின்றனர்.

இருப்பினும், சரியான வேட்பாளரை சரியான நேரத்தில் நாம் வழங்கினோம். ஜே.வி.பி யும் தனது வேட்பாளரை முன்வைத்தது.

இருப்பினும் நெருக்கடி காரணமாக ஜனாதிபதி வேட்பாளரை ஐ தே க அறிவிக்கவில்லை . இப்போது அவர்கள் கட்சி யாப்பை முன்வைத்து நெருக்கடியை மறைக்க முயற்சிக்கின்றனர் என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்