Sat. May 16th, 2026

கோட்டபாய ராஜபக்சவிற்கு வாக்களிப்பார்கள் என்ற கருணாவின் கருத்துக்கு  தமிழ் மக்கள் விசனம்

கோட்டபாய ராஜபக்சவிற்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிடத்திற்கு தமிழ் மக்கள் பலரும் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புக்கு அமைச்சர் கோட்டபாய ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டதையடுத்தே இக்கருத்தை அவர் வெளியிட்டார். நேற்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய மாநாடு நடைபெற்றது. அதன் பின்னர் ஊடகங்களைச் சந்தித்த போதே விநாயகமூர்த்தி முரளிதரன் இக்கருத்தை வெளியிட்டார். ஆனால் இக்கருத்துக்கு வடக்கு கிழக்கு மக்கள் பலரும் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் மக்களின் இனப் படுகொலைக்கு முக்கிய காரணமாக இருந்த கோட்டபாய ராஜபக்ஸவை எவ்வாறு எம்மால் ஏற்றுக் கொள்ள முடியும். இந்நிலையில் இவற்றை முரளிதரன் மறந்திருக்கலாம் நாம் மறக்கவில்லை எனவும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed