கொழும்பு வத்தளையில் ஆடை விற்பனை நிலையம் எரிந்து நாசம்
கொழும்பு ,வத்தளை பகுதியில் உள்ள ஹேகித்தையில் அமைந்துள்ள சுசி ஆடை விற்பனை நிலையத்தில் இன்று காலை 7 மணியவில் தீ விபத்துது ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
தீ விபத்தினால் ஆடை விற்பனை நிலையத்தில் இருந்த பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை
சம்பவ இடத்தில் 5 தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டுள்ளன. இதனால் குறித்த பகுதியில் மிகவும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாகவும் செய்திகள் வருகின்றன