கொழும்பு பாடசாலையில் ஆறு வயது மாணவன் துஸ்பிரயோகம், 5 வருடங்களின் பின் வந்த தீர்ப்பு
கொழும்பின் பிரபலமான ஆண்கள் பாடசாலை ஒன்றில் 5 வருடங்களுக்கு முன்னர் மாணவன் ஒருவனை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமைக்காக அதே பாடசாலையின் மாணவர்கள் இருவருக்கு தலா 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
ரக்பி விளையாட்டு வீரர்களின் குறித்த இரு மாணவர்களும் ஜிம்னாஸ்டிக் வகுப்புக்காக காத்திருந்த 6 வயதான மாணவனை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருந்தார்கள். இந்த சம்பவம் 5 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் நேற்றையதினம் இருவருக்கும் 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் , சிறுவனுக்கு நட்ட ஈடாக தலா ஒரு லடசம் ரூபா வழங்குமாறும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுவாராச்சி உத்தரவிடடார். மேலும் இரண்டு குற்றவாளிகளுக்கு தலா 20,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.அத்துடன் நீதிமன்றம் விதித்த அபாராதத் தொகையை குற்றவாளிகள் செலுத்தத் தவறுவார்களாயின், அவர்களுக்கு மேலும் 43 மாதங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்