Sat. Dec 7th, 2024

கொலை செய்துவிட்டு 13 வருடங்கள் தலைமறைவு!! -வசமாக மாட்டியவருக்கு மரண தண்டனை-

கேகாலை பகுதியல் கடந்த 2006 ஆம் ஆண்டு கொலை செய்துவிட்டு 13 வருடங்கள் தலைமறைவாக இருந்தவர் பொலிஸாரிடம் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார்.

பொலிஸாரிடம் மாட்டிய அவரை கேகாலை உயர் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21.02.2006 அன்று கேகாலை பகுதியில் குறித்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த 13 வருடங்களாக தலைமறைவாகி இருந்த சந்தேக நபரை கேகாலை பொலிஸாசார் நேற்று கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திவேல, உடகம பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையத்து குறித்த சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸாசார் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்