Mon. Aug 10th, 2026

கொரோனா வைரஷால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மன்னாரில் பிரார்த்தனை

இன மத வேறு பாடின்றி நாம் பல்வேறு மதங்களை பின் பற்றுபவர்களாக இருந்தாலும் மனித நேயத்தோடு நாம் வழிபடும் கடவுளிடம் கொறோணா வைரசினால்   பாதிக்கப்பட்டு இறந்த  ஆன்மாக்களுக்காகவும், இவர்களை இழந்து துயரப்படும் மக்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.என மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதைய இயக்குனர்  அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தெரிவித்தார்.
உலகையே அச்சத்திற்குள்ளாக்கும் கொறோணா வைரசினால் இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கான இரங்கல் வழிபாடு மன்னார் கறிற்ராஸ்-வாழ்வுதய மண்டபத்தில் அதன் இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் தலைமையில் நேற்ற புதன் கிழமை மாலை இடம்பெற்றது.
-இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
ஆவர் மேலும் தெரிவிக்கையில்,,,
இன்றைய காலத்தில் இவ் உலகை அச்சத்தில் ஆழ்த்தும் விடயம் கொறோணா வைரஸ். இதன் தாக்கம் படிப்படியாக பல நாடுகளில் பரவி வருகின்றது.
குறிப்பாக சீனாவிற்கு அடுத்தாக இத்தாலி, தென்கொறியா போன்ற நாடும் பாதிக்கப்படுவதாக செய்திகளில் வாசிக்கின்றோம்.
எனவே இன மத வேறுபாடின்றி நாம் பல்வேறு மதங்களை பின் பற்றுபவர்களாக இருந்தாலும் மனித நேயத்தோடு நாம் வழிபடும் கடவுளிடம் இதனால் பாதிக்கப்பட்டு இறந்த  ஆன்மாக்களுக்காகவும், இவர்களை இழந்து துயரப்படும் மக்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.
 இவை மட்டுமல்லாது இன் நோயினை கட்டுப்படுத்துவதற்கு இரவு பகல் பாராது பாடுபடும் வைத்திய நிபுணர்களுக்கு இறைவன் நல்லதொரு வழி காட்டியாக செயற்படுவதற்கும், அனைவரும் இணைந்து பிரார்த்தனை செய்வது காலத்தின் தேவை என்பதைவிட இதுவே மனித மாண்பை மதிக்கும் செயலாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் போது கறிற்ராஸ்-வாழ்வுதய பணியாளர்கள் மற்றும் வாழ்வுதயத்தில் கணனி பயிற்சியினை பெறும் மாணவர்கள் அனைவரும்; இணைந்து கொண்டனர்.
இவ் இரங்கல் வழிபாட்டில் குறிப்பாக இதனால் பாதிக்கப்பட்டு இறந்த ஆன்மாக்களுக்காகவும்,இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தாக்கத்திலிருந்து விரைவாக மீண்டு உடல் உள ஆரோக்கியம் பெறுவுதற்கும் இறை ஆசீர் வேண்டப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed