கொடிகாமம் நகரை அழகுபடுத்தும் ஓவியங்கள்
சாவகச்சேரி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கொடிகாமம் நகர்ப்பகுதி கொடிகாமம் பிரதேச இளைஞர்கள் வர்த்தகர்கள் பொது மக்கள் ஒன்றிணைந்து வர்ண ஓவியங்களை வரைந்து வருகின்றனர்
தமிழர் பண்பாட்டு பாரம்பரிய கலாசாரங்களையும் தொழில்நுட்பங்களையும் பிரதி பலிக்கக்கூடிய வகையிலான வர்ணப்படங்களை பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களது நிதிப்பங்களிப்பில் வரைந்து அழகுபடுத்துவதற்கான அனுமதியினை கோரி 26/12/2019 நடைபெற்ற சாவகச்சேரி
பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வில் உபதவிசாளர் செ.மயூரன் பிரேரணையாக சமர்ப்பித்திருந்தார்.
கலை பண்பாடு மற்றும் கலாசாரங்களை வெளிப்படுத்தக் கூடியதும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தக்கூடியதுமான ஓவியங்களை வரைந்து வருகின்றனர்

