கொக்குவில் வராகி அம்மன் கோவிலடியில் வாள்வெட்டு!! -இரு இளைஞர்கள் காயம்-
கொக்குவில் வராகி அம்மன் கோவிலடி பகுதியில் வைத்து இரு இளைஞர்கள் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.