கொக்குவில் பகுதியில் மதுப்பிரியரின் அட்டகாசம்
மதுப் பிரியரின் அட்டகாசத்தால் வீட்டில் தங்கியிருந்த இரு வயோதிபர்கள் தாக்கப்பட்டதோடு அவர்களின் உடமைகளையும் உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் புகையிரத வீதி கொக்குவில் கிழக்கு கொக்குவில் எனும் இடத்தில் நடைபெற்றது.
சம்பவத்தில் ரவீந்திரன் (வயது 70), செல்வராசாத்தி (வயது 65), ஆகியோரே காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது, இன்று மாலை மது போதையில் அருகிலுள்ள வயோதிபர்கள் தங்கியிருந்த வீட்டினுள் புகுந்து வீட்டின் கண்காணிப்பு கமரா மற்றும் மோட்டார் சைக்கிள் உட்பட வீட்டின் உபகரணங்களை சேதமாக்கியதோடு மட்டுமல்லாமல் வீட்டுக் கதவை உடைத்து வயோதிபர்களையும் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.