கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு பளுதூக்கலில் இரண்டு வெண்கல பதக்கங்கள்
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு இரண்டு வெண்கல பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு தேசிய மட்ட பளுதூக்கல் போட்டி பொலநறுவையில் நடைபெற்று வருகிறது.

இதில் 20 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த எம்.சர்மி 103 கிலோ பளுவைத் தூக்கி வெண்கல பதக்கத்தையும்,

17 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் ஏ.கஜிதரன் 125 கிலோ பளுவைத் தூக்கி வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர்