கைதடி சரஸ்வதி கிண்ணம் மட்டுவில் மின்னல் அணி வசம்
கைதடி சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தென்மராட்சி ரீதியாக நடாத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் மட்டுவில் மின்னல் அணி 31 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
கைதடி சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தென்மராட்சி ரீதியாக நடாத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த கழக மைதானத்தில் நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் மட்டுவில் மின்னல் அணியை எதிர்த்து நாவற்குழி சான்றோர் அணி மோதியது.
முதலில் துடுப்பாடிய மட்டுவில் மின்னல் அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 131ஓட்டங்களைப் பெற்றனர். அவ்வணி சார்பில் பிரவீன் 47 ஓட்டங்களையும் தனுசிகன் 43 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.
பந்து வீச்சில் நாவற்குழி சான்றோர் அணி சார்பில் கெவின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நாவற்குழி சான்றோர் அணி நிர்ணயிக்கப்பட்ட
10 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். அவ்வணி சார்பில் சதானந்த் 40 ஓட்டங்கள்
கெவின் 24 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றனர். பந்து வீச்சில் மட்டுவில் மின்னல் அணி சார்பில் சங்கீதன் , பிரவீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் மட்டுவில் மின்னல் அணி 31 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்ததோடு இவ்வாண்டு நடைபெற்ற சுற்றுப் போட்டிகளில் தொடர்ச்சியாக 5 வருடங்கள் சம்பியனாகியமையும் குறிப்பிடத்தக்கது.