கோத்தாபய ராஜபக்ச பலத்த கைத்தட்டலுக்கு மத்தியில் ஏகமனதாக வேட்பாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்
எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ பொது ஜன பெரமுனவின கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இருப்பார் என்று கூறியுள்ளார்.
கோதபய ராஜபக்ஷவின் பெயர் இன்றைய கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரால் முன்மொழியப்பட்டது.
ஆட்சேபனைகளோ அல்லது வேறு எவர்களினது பெயர்களோ முன்மொழியப்படவில்லை
கட்சித் தலைவர்கள் அனைவரும் கோதபய ராஜபக்ஷவின் பெயரை கைதட்டலுடன் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.
நாளைய தினம் சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெறும் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக ஜனதிபதி வேட்பாளரை அறிவிப்பார்