பெரஹராவின் பொழுது இரண்டு யானைகள் மதம்கொண்டத்தில் 17 பேர் காயம்
கொழும்பில் உள்ள கோட்டை ரஜமகா விஹாரையின் நேற்றைய தினம நடைபெற்ற பெரஹராவின்போது இரு யானைகள் மதம் கொண்டெழுந்ததில் 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்ததில் 12 பேர் பெண்கள் என்றும், காயமடைந்த அனைவரும் ஜயவர்தனபுர , கொழும்பு , மற்றும் களுபோவில வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டுவருகிறார்கள் .