கெருடாவில் கிராமத்தில் கிணறுகள் கையளிப்பு
எம் கெருடாவில் கிராமத்தின் 4 வற்றாத நன்னீர் கிணறுகள் மத்திய அரசின் விவசாய துறை அமைச்சின் மூலம் பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் ஊடாக தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது. இக் கிணறுகள் பயனாளிகளிடம் கையளிக்கும்நிகழ்வு 28.08.2019அன்றுகாலை 10 மணியளவில் நடைபெற்றது. பிரதேச செயலாளர் மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம உத்தியோகத்தர் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்…