Tue. Sep 8th, 2026

கூட்டமைப்பு – கோத்தாபய இரகசிய டீல்!! -சித்தாத்தன் எம்.பி ஊடாக காய் நகர்வு-

நாட்டின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளோட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தாத்தன் சந்தித்து இரகசிய பேச்சுhவர்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

வெகு விரையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யார் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்கப் போகின்றது என்பது தொடர்பில் பரஸ்பர பேச்சுக்களும், கருத்துக்களும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சித்தாத்தன் கோத்தபாய ராஜபக்சவை திடீரென சந்தித்துள்ளார்.

சுமார் ஒரு மணித்தியாலம் நடைபெற திட்டமிட்டிருந்த இச் சந்திப்பு பேச்சுவார்த்தை நீடித்த காரணத்தினால் 3 மணித்தியாலங்கள் வரை நீடித்திருந்தது.

அந்த 3 மணித்தியாலங்களாக இருவரும் பேசிக் கொண்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக்களை கூற இருவரும் மறுத்து வருகின்றனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed