Sun. Dec 8th, 2024

கூட்டமைப்பின் எம்.பிக்கள் பணபலம் படைத்தவர்கள்!! -யாழில் போட்டுடைத்தார் ரணில்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 100 பில்லியன் ரூபா நிதியினை கொண்டு முதலீடுகளை செய்யக் கூடிய பணபலம் படைத்தவர்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாடைமாடையாக தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று ஞாயிற்றுக் கிழமை வருகைதந்த யாழ்.மாநகர சபையின் நகர மண்டபத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்து அங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

அங்கு உரையாற்றிய பிரதமர் யாழ்ப்பாணத்தில் செய்யப்படவுள்ள அபிவிருத்தி தொடர்பிலும், அதற்கான திட்டங்கள் தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்தார்.

குறிப்பாக பாரிய அளவில் செய்யப்படவுள்ள அபிவிருத்திக்காக தனியான நிதியம் ஒன்றினையும் கட்டியேழுப்ப வேண்டும் என்றும், தொழில் முயட்சியாளர்களையும் உள்ளீர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பிரதமரின் பேச்சிற்கு அங்கிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கைதட்டி பிரதமரின் கருத்தை வரவேற்றிருந்தார்.

இதனை ஆவதானித்த பிரதமர் இடை நடுவில் பேசிய விடயத்தை நிறுத்திவிட்டு, தொழில் முயட்சியாளர் என்ற ரீதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உடனடியாக கைதட்டி தனது கருத்திற்கு ஆதரவு தருகின்றார் என்பதையும் நிகழ்வில் இருந்தவர்களுக்கு பிரதமர் தெரியப்படுத்தியிருந்தார்.

சரவணபவனின் ஆதரவினை வெளிப்படுத்திய பிரதமர் இவ்வாறான தொழில் முதலீட்டினை இங்கு செய்ய வேண்டுமாகா இருந்தால் குறைந்தது 100 பில்லியன் ரூபா நிதி தொழில் முயட்சியாளருக்கு தேவைப்படும் என்று கூறி அந்த விடயத்தை முடித்துக் கொண்டு, தனது அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் தொடர்ந்து பேசத்தொடங்கினார் பிரதமர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்