Mon. May 18th, 2026

குழப்ப நிலையைப் போக்க நாளை யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வடமாகாண ஆளுநர் அறிவிப்பு

நல்லூர் தேர் திருவிழாவை முன்னிட்டு யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை வியாழக்கிழமை (21.08.2025) விடுமுறை வழங்கப்படுவதாக வடமாகாண கெளரவ ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.
பதில் பாடசாலை நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் நாளை யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டதையடுத்து அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்ப நிலையைப் போக்குவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக கல்வியியலாளர்கள் கருத்து தெரிவிக்கையில், பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கு தொடர்பாக இலங்கை கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர்,  அந்தந்த மாகாண ஆளுநர் மற்றும் செயலாளர்களுக்கே அதிகாரம் உள்ளது. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுக்கப்பட்டதை உடனடியாக செய்திகளை முந்தியடித்து தமது சமூக வலைதளங்களில் பதிவேற்றுவது மிகப் பெரிய தவறான விடயமாகும். இனியாவது பாடசாலைகள் தொடர்பாக செய்திகள் வெளியிடும் போது சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டும்.
ஒவ்வொரு பிரதேசங்களிலும் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் உள்ளன. அந்தந்த பிரதேச கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர்கள் வேண்டுகோள் விடுக்கப்படுமிடத்து குறித்த பாடசாலைகளுக்கு மாத்திரம் விடுமுறை வழங்கப்பட்டு பதில் பாடசாலை ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது இரண்டாம் தவணை பரீட்சைகள் நிறைவடைந்து விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீடு நடைபெற்று தேர்ச்சி அறிக்கை வழங்குவதில் பலரும் பல சவால்களை எதிர்கொள்ளகின்றனர். இந்நிலையில் மூன்றாம் தவணைக்கான மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் இடையூறு வழங்குவது மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது வெளியாகியுள்ள க.பொத. சாதாரண தர பரீட்சை பொறுபேறுகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்ய பல தரப்பினரும் பாடுபடுகின்றார்கள். எனவே இனிமேலாவது சமூக வலைதளங்கள் செய்திகளை வெளியிடும் போது சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed