Sun. Oct 6th, 2024

குழப்பங்களின் நடுவே இன்று கூடுகிறது ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம்

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று (19) மாலை 4.00 மணிக்கு அலரி மாளிகையில் கூட்டப்பட உள்ளது.

கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர், ஐக்கிய தேசிய முன்னணியுடன் (யு.என்.எஃப்) இணைந்த கட்சிகளுடன் புதிய கூட்டணியை உருவாக்குதல் மற்றும் எதிர்கால நாடாளுமன்ற செயல்பாடுகள் ஆகியவை தொடர்பாக கூட்டத்தின் போது விரிவாக விவாதிக்கப்படும்.

இதற்கிடையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாச சந்திக்க உள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களின் கூட்டம் ஒன்று புதிய கூட்டணியை உருவாக்குவதற்கான உடன்பாட்டை எட்டாமல் முடிவுற்றது குறிப்பிட தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்