Sat. May 16th, 2026

குளவி தாக்கியதில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பலி

முல்லைத்தீவு மாங்குளத்தில் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி பலியான பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஜோர்ஜ்

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் குளவித் தாக்குதலுக்குள்ளான உதவிக்கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளளாரே

மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் பழையகொலணிபகுதியில் குளவிக்கூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் வீதியால் சென்றோரை தாக்கிய சமயம் அவ் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரி ஒருவர் உட்பட 5 மாணவர்களை குறித்த குளவிகள் கொட்டியுள்ளது

குளவிகள் கொட்டியதில் பாதிப்படைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியிருந்த முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அன்ரனி ஜோர்ஜ் (53 வயது) அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குளவிக்கொட்டுத் தாக்குதலுக்குள்ளான 5 பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கை கல்வி நிருவாக சேவை (SLEAS) தரம் || அதிகாரியான இவர் தனது மகனை பாடசாலையிலிருந்து அழைத்துவரும் நிலையிலேயே குறித்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed