குளவி கூட்டை கொழுத்தபோய் சுற்றுலா விடுதியே எரிந்து போன பரிதாபம்
டிக்கோயா அரச வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள விடுதி ஒன்று எரிந்து சேதமாகி உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் தேயிலை தோட்ட நிறுவனக்களினது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக இருந்த கட்டிடம், பின்னர் வடிவமைக்கப்பட்டு உல்லாச விடுதியாக்கப்பட்டிருந்தது. விடுதியின் கூரையில் இருந்த குளவிகூட்டை எரிக்க முற்படுகையில் தீ கட்டிடம் முழுவதும் பரவி பலத்த சேதமடைந்துள்ளது. ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தபோதும் தீயினால் கட்டடம் முற்றாக எரிந்துபோயுள்ளது