குருநாகல் சந்தியில் கோர விபத்தில் சிக்கிய பேருந்து!! -17 பேர் வைத்திய சாலையில்-
குருநாகல் ஹால்பார சந்தியில் தனியார் பேருந்து ஒன்றும் கனரக பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
குருநாகலிலிருந்து கேகாலை நோக்கி பயணித்த தனியார் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானதோடு காயமடைந்த அனைவரும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.