Sun. Sep 8th, 2024

குப்பையோடு குப்பையாகப் போடப்பட்ட எட்டு பவுண் தங்க நகைகளை மீட்டுக் கொடுத்த சுகாதார தொழிலாளி பலரும் பாராட்டு

சாவகச்சேரி நகர சபை குப்பை உழவு இயந்திரத்தில் குப்பையோடு குப்பையாகப் போடப்பட்ட எட்டு பவுண் தங்க நகைகளை உரியவர்களிடம் கண்டெடுத்து வழங்கிய மகிழங்கேணி இளைஞன்
சண்முகம் தமிழ்சனுக்கு பலரும் பாரட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
நேற்று சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை பகுதியைச் சேர்ந்தவர் திருடர்களுக்கு பயத்தில் பழைய பொருட்களுடன் 8 பவுண் மதிக்கத்தக்க நகைகளை மறைத்து வைத்துள்ளார். அதனை மறந்து போய் குப்பைகளை ஏற்றும் நகரசபை உழவு இயந்திரத்தில்  குப்பையோடு போடப்பட்டு விட்டதை அறிந்து சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்தவர்கள் நகர சபை ஊழியர்களை அணுகியுள்ளனர்.
நகர சபையின் சுகாதார தொழிலாளர்களினால் தேடுதல் மூலம் கண்டெடுக்கப்பட்டு உரியவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இதனை மகிழங்கேணியைச் சேர்ந்த நகர சபையில் நீண்ட காலம் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக சுகாதார தொழிலாளியாகக் கடமையாற்றும் சண்முகம் தமிழ்சன் மூலம் கண்டெடுக்கப்பட்டு உரியவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்