Wed. Apr 24th, 2024

குப்பைகளை அள்ள புதிய உபகரணம்! நிலத்தில் இல்லை கடலில்.

ஏறத்தாள 150 மில்லியன் டான் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் உள்ளது. சமீபத்தில் UKல் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் அடுத்த பத்து வருடங்களில் இதனளவு 3 மடங்கால் அதிகரிக்கும் என்று கணித்திருக்கின்றது. இந்த கழிவுகள் கடல் வாழ் உயிரினங்கள் வாழ முடியாத சூழலை உருவாக்கி அவை அழியக்கூடிய அபாயத்தை உருவாக்கின்றது. இதனால் மீன்பிடி துறை மற்றும் சுற்றுலாத்துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கடல் உணவுகள் மூலம் மற்றைய உயிரினங்களின் ஆரோக்கியத்திற்கும் இது பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்க படுகின்றது.

 

 

 

 

இதை அகற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளும் ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், பசிபிக் பெருங்கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு பெரிய குப்பை சேகரிக்கும் சாதனம் இறுதியாக பிளாஸ்டிக் கழிவுகளை சிறப்பாக எடுப்பதாக அதன் கண்டுபிடிப்பாளர் போயன் ஸ்லாட் புதன்கிழமை (2019/10/02) அறிவித்தார்.

 

நெதர்லாந்தை தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற பெருங்கடல் தூய்மைப்படுத்தும் அமைப்பு அதன் சமீபத்திய கழிவுகளை சேகரிக்கும் உபகரணத்தை பற்றி குறிப்பிடுகையில், “இந்த சாதனம் பேய் வலைகள் என்று அழைக்கப்படும் பிரமாண்டமான மற்றும் கைவிடப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் முதல் 1 மில்லிமீட்டர் சிறிய மைக்ரோபிளாஸ்டிக் வரை குப்பைகளை கைப்பற்றி வைத்திருக்க கூடியது” என்று கூறுகிறது.

 

“நாங்கள் இப்போது பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து வருகிறோம் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்” என்று ஓஷன் கிளீனப் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி போயன் ஸ்லாட் ரோட்டர்டாமில் (Rotterdam) ஒரு செய்தி மாநாட்டில் கூறினார்.

 

பெருங்கடல் துப்புரவு சாதனம் என்பது U- வடிவ தடையாகும். இதனுடன் வலை இணைக்கப்பட்டு ஒரு பாவாடை போன்று நீரின் மேற்பரப்பிற்கு கீழே தொங்கும். இது நீரோட்டத்துடன் நகர்கிறது. இது வேகமாக நகரும் பிளாஸ்டிக்குகளை சேகரிக்கிறது. மீன் மற்றும் பிற விலங்குகள் அதன் அடியில் நீந்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.

 

இது “தி கிரேட் பசிபிக் குப்பைத் தொட்டியில்” (the great pacific garbage patch) பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஹவாய் மற்றும் கலிபோர்னியாவிற்கு இடையில் அமைந்துள்ளது. குப்பைகளின் செறிவானது டெக்சாஸின் இரு மடங்காக அல்லது பிரான்சின் மூன்று மடங்காக காணப்படுகின்றது. இந்த சாதனத்தின் உதவியுடன் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒருமுறை பிளாஸ்டிக் கழிவுகளின் அளவை பாதியாக குறைக்க முடியும் என்று ஓஷன் கிளீனப் கணித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்