குதிரையுடன் பந்தயத்தை நடத்த நீங்கள் கழுதையை அனுப்பி வைக்க முடியாது -அமைச்சர் வசந்த சேனநாயக்க
பொதுஜன பெரமுனா கட்சியினால் பரிந்துரைக்கக்கூடிய வலிமையான வேட்பாளர் கோட்டபய ராஜபக்ஷ மட்டும்தான். அவர்கள் தங்களுடைய வலிமையான வேட்ப்பாளரையே தேர்வு செய்துள்ளார்கள் . அதுவே பொதுஜன முன்னணியின் சரியான தேர்வு என அமைச்சர் வசந்த சேனநாயக்க கூறினார்
நேற்று மாலை (28) நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருது தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்படி, ஐக்கிய தேசிய கடைசியும் . தனது வலுவான வேட்பாளரையும் தெரிவு செய்ய வேண்டும் என்று அவர் அவர் சுட்டிக்காட்டினார்.
குதிரையுடன் பந்தயத்தை நடத்த நீங்கள் கழுதையை அனுப்பி வைக்க முடியாது என்று சேனநாயக்க நக்கலாக கூறினார். இவர் சஜித் பிரேமதாசாவின் விசுவாசி என்பது குறிப்பிடத்தக்கது