குண்டு போடுதலில் சுண்டுக்குளிக்கு தேசியத்தில் வெண்கலம்
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட குண்டு போடுதலில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த அ.ஆயிலை வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழுப்பு தியகம ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் 14 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த அ.ஆயிலை 10.04 மீற்றர் தூரம் எறிந்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.