குண்டு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியின் மகன் கைது

தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் முக்கிய தலைவர் நெளபர் மெளலியின் மகனான மொகமட் நெளபர் அப்துல்லா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சஹ்ரானுடன் தொடர்புடையதாக கருதப்படும் தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் சஹ்ரானுடன் பயிற்சி பெற்றதாக கருதி கைது செய்யப்பட்டு வரும் இந்நிலையில் இவ் அமைப்பின் தலைவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது