குண்டுதாரியின் உடல்பாகம் புதைக்கப்பட்டதை தொடர்ந்து பதற்றம், பொலிஸார் கண்ணீர் புகைவீச்சு
![](https://newsthamil.com/wp-content/uploads/2019/08/Skärmklippssc.jpg)
தற்கொலைதாரியின் உடல்பாகங்கள் கல்வியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து மட்டக்களப்பு எங்கும் பதற்றம் நிலவுகின்றது. மட்டக்களப்பு கல்லடிபாலத்தில் ஒன்று கூடிய இளைஞர்கள் மட்டகளப்பு அம்பாறை வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தியுள்ளார்கள்.
சீயோன் தேவாலயத்தில் தாக்குதலை நடத்திய குண்டுதாரி முஹமட் நாசர் ஆசாத்தின் தலை மற்றும் காலின் ஒருபகுதிகளுமே கல்வியங்காடு இந்துமயானத்தில் மட்டக்களப்பு மாநகர முதல்வரின் அனுமதியோடு இரகசியமாக புதைக்கப்பட்டதாக தகவல்வெளியானதை தொடர்ந்தே இந்த ஆர்பாட்டங்கள் நிகழ்கின்றன
.