Sat. Feb 15th, 2025

குண்டுதாரியின் உடல்பாகங்கள் மீண்டும் மருத்துவமனை பிரேத அறையில்..

கல்வியங்காடு இந்து மயான வளாகத்தில் இருந்து சியோன் சர்ச் தற்கொலை குண்டுதாரியின் அடக்கம் செய்யப்பட்ட உடலுறுப்புகளை திரும்ப எடுத்து வேறு ஒரு இடத்தில அடக்கம் செய்யுமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் இந்த உத்தரவை மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு வழங்கியுள்ளார்

குண்டுதாரியின் தலை ஆகஸ்ட் 26 ஆம் தேதி கல்வியங்காடு இந்து மயானத்தில் மட்டக்களப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அடக்கம் செய்யப்பட்டது, பின்னர் அது முடிவுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.

பின்னர் அரச அதிபர் ஒரு பிரேரணையை நீதிமன்றில் சமர்ப்பித்து, மட்டக்களப்பு மாவட்டத்தின்தற்போதைய நிலைமை குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தார்.இதனை கருத்திலெடுத்த நீதிமன்றம்
, செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு முன்னர் குண்டுதரையின் உடல்பாகங்களை வெளியில் எடுத்து , அதை மருத்துவமனையின் பிரேத அறையில் தற்காலிகமாக வைக்குமாறு உத்தரவிட்டது.

இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் நான்கு பேர் அக்டோபர் 4 ஆம் தேதி மீண்டும் மட்டக்களப்பு ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளனர்.

வியாழேந்திரன் , மட்டக்கள பிரதேச சபை உறுப்பினர் செல்வி மனோகரன் மற்றும் மூன்று பேர் இன்று (30) நீதிமன்றத்தில் ஆஜரானபோது மட்டக்களப்பு நீதவான் இந்த உத்தரவை வழங்கியிருந்தார்.

சியோன் சர்ச் தற்கொலைக் குண்டுதாரியின் உடல்பாகங்களை மட்டக்ககளப்பில் உள்ள இந்து மயானத்தில் அடக்கம் செய்வதற்கு எதிராக அண்மையில் வியாழேந்திரன் தலைமையிலான ஏற்பாடு செய்திருந்த போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததால் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினரிடம் அறிக்கை பதிவு செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்