குடும்ப தகராறு மனைவி மீது அமில தாக்குதல்! -கணவர் பொலிஸாரால் கைது-
ஹொரணை அங்குருவாதோட்ட பகுதியில் குடும்ப சண்டை காரணமாக மனைவி மீது அமிலத்தால் தாக்குதல் நடத்திய கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக இந்த அமில தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 30 வயதான பெண், ஹொரணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் 31 வயதான கணவரும் ஹொரணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.