Thu. Jan 23rd, 2025

குடிவரவு சட்டங்களை மீறிய வழக்கில் கோத்தபாயவிடம் வாக்குமூலம் பெற சி.ஐ .டி க்கு அனுமதி மறுப்பு -கொழும்பு நீதிமன்றம் அதிரடி

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கு குற்றப் புலனாய்வு பிரிவு விடுத்து கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன நேற்று நிராகரித்தார்.

அமெரிக்க பிரஜையாக இருந்துகொண்டு, தேர்தல் சட்டம் மற்றும் பிரஜைகள் சட்டம் என்பனவற்றை மீறி, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தற்பொழுது குற்றப்புலனாய்வு பிரிவினர் நடத்தி வரும் விசாரணைகளின் தொடர்ச்சியாகவே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது

இந்த நிலையில், குற்றப் புலனாய்வு பிரிவு விடுத்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி , ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு மற்றும் குடிவரவு, குடியகழ்வு திணைக்களம் என்பனவற்றிடம், விசாரணைகளுக்கு தேவையான ஆவணங்களைப் பெற்று அவற்றை மன்றுக்கு அறிக்கைப்படுத்தமாறு கூறியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்