குடாநாட்டுக்கான நன்னீர் திட்டதுக்கு ஜனாதிபதி அடிக்கல் நாட்டினர்
யாழ்.மாவட்டத்தின் நீா் தேவைகளுக்காக வடக்கு ஆளுநா் சுரேன் ராகவனால் உருவாக்கப்பட்ட வடமராட்சி களப்பு குடிநீா் திட்டத்திற்கான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கப்பூதுவெளி- அந்தணன் திடல் பகுதியில் இந்த குடிநீா் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப பணிகளை ஜனாதிபதி மைத்திபால சிறிசேனா தொடக்கிவைத்தாா்
யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா இந்த திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டியுள்ளாா். 2 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டதின் மூலம் வடமராட்சி கப்பூது வெளியில் பாரிய அணை அமைக்கப்பட்டு நீரை தேக்கி குடநாட்டுக்கு நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது
இந்த நிகழ்வின்போது விவசாயம் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ஹரிசன் பெர்ணான்டோ மற்றும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், நீரியல்வளத்துறை அதிகாரிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இன்றயதினம் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த திட்டம் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்பித்து இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவடைய வேண்டி இருந்த நிலையில் வன உயிரிகள் திணைக்களத்தின் முட்டுக்கட்டையால் ஓராண்டு தாமதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.