கிழக்கில் அதிகாலையில் நடந்த கோரம்..! இருவா் பலி, ஒருவா் படுகாயம்..
இன்று அதிகாலை மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் இரு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளதுடன், மேலும் ஒருவா படுகாயமடைந்துள்ளாா்.
மணல் ஏற்றிவந்த டிப்பா் வாகனத்துடன் எதிரே வந்த கன்டா் வாகனம் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது, இந்த விபத்து டிப்பா் வாகனத்தின் சக்கரம் காற்று போனமையால் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடா்பில் விசாரணைகளை பொலிஸாா். மேற்கொண்டிருக்கின்றனா்.