கிளிநொச்சி அறிவியல் நகர் விபத்தில் சம்பவ இடத்தில ஒருவர் பலி

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்ற கார் மற்றும் பேரூந்து விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்தும், கிளிநொச்சி நோக்கி சென்ற காருமே ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளன.
அறிவியல் நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகத்தின் முன்னாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது காரின் முன்பக்கம் நொறுங்கியதால் காரை ஓட்டி சென்றவர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவரது சடலம் பலத்த சிரமத்தின் மத்தியில் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் இங்கிலாந்து பிரஜை என்று தெரியவருகிறது.
இந்த விபத்தினால் பேருந்தில் வந்த எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. காரில் சாதியை தவிர வேறு ஒருவரும் இல்லாததபடியால் வேறு எவரும் பாதிக்கப்படவில்லை. கிளிநொச்சி பொலிஸார் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்