கிளிநொச்சியிலும் கொரோனா வைத்தியசாலை
கிளிநொச்சியில் கொரோனா நோயாளர்களுக்கான வைத்தியசாலை ஒன்று நாளை புதன்கிழமை முதல் செயற்படவுள்ளது. கிளிநொச்சி கிருஷ்ணபுரம் கிராமத்திலேயே இவ் வைத்தியசாலை நாளை திறக்கப்படவுள்ளது. மாவட்டங்களில் கொரோனா நோயாளர்களுக்கான வைத்தியசாலை நிறுவப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் மருதங்கேணியிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளத்திலும் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் கிளிநொச்சி கிருஷ்ணபுரம் கிராமத்தில் வைத்தியசாலை ஆரம்பிக்கப்படவுள்ளது. 200 படுக்கைகள் கொண்ட வசதிகளுடன் நாளை காலை 11 மணிக்கு திறக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.