கிரிக்கெட்டில் விக்கினேஸ்வரா கல்லூரி சம்பியன்

வடமராட்சி கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான மென்பந்து கிரிக்கெட் போட்டியில் கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரி அணி சம்பியனாகியது.
வடமராட்சி கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான மென்பந்து கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டம் அண்மையில் கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரி அணியை எதிர்த்து வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி அணி மோதியது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரி அணி 47 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி அணி 34 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரி அணி 13 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியனாகியது. 3ம் இடத்தை திரு இருதயக் கல்லூரி அணி பெற்றது.