Thu. May 21st, 2026

கிணற்றில் இருந்து பெணின் சடலம் மீட்பு!!

வவுனியா- மஹரம்பகுளம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

85 வயதுடைய அண்ணலக்‌ஷ்மி எனும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று காலை குறித்த பெண் காணாமல் போயிருந்த நிலையில் அவரை தேடும் பணியில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் இவ்வாறு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தவறுதலாக குறித்த பெண் கிணற்றில் விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேககிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed