காளான் வளர்ப்பு தொடர்பான பயிற்சி வகுப்பு கரவெட்டியில்

கரவெட்டி கமநல சேவை திணைக்களத்தினால் சுயதொழிலில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கும் முகமாக காளான் வளர்ப்பு தொடர்பான செயன்முறையுடன் கூடிய பயிற்சி வகுப்பு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கரவெட்டி கமநல சேவை திணைக்களத்தில் நடைபெறவுள்ளது.
கரவெட்டி விவசாய போதனாசிரியர் திருமதி.பிருந்தா பிரதீபன் அவர்களால் குறித்த பயிற்சி வழங்கப்படவுள்ளதுடன் காளான் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் அனுபவப் பகிர்வும் இடம்பெறவுள்ளது. குறித்த வகுப்பு தொடர்பான விபரங்களை 0773725650 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.