காலை புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிள்: மாலையில் கொள்ளையர்களிடம் பறிகொடுத்த இளைஞர்!!
யாழ்ப்பாணம் இனுவில் பகுதி இளைஞர் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிள் சில மணி நேரத்திலேயே கொள்ளை கும்பல் ஒன்றினால் பறித்துச் செல்லப்பட்டுள்ளது.
இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் யாழ்.நகர் பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்திற்குச் சென்று 2 இலட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார்.
புதிய மோட்டார் சைக்கிளை ஆலயத்திற்கு கொண்டு சென்று பூஜை வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தனது உறவினர் வீட்டுக்கு மாலை சென்றுள்ளார்.
உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் கொண்ட கொள்ளை கும்பல் குறித்த இளைஞனை சரமாரியாக தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளையும் பறித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார். பொலிசார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.