Fri. Mar 21st, 2025

காலாவதியான சோடாக்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனைக்காக வைத்திருந்த குற்றத்திற்காக கூல்பார் உரிமையாளரிற்கு 30 ஆயிரம் ரூபா தண்டம்

திருநெல்வேலி பகுதியில்  காலாவதியான சோடாக்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனைக்காக வைத்திருந்த குற்றத்திற்காக கூல்பார் உரிமையாளரிற்கு 30 ஆயிரம் ரூபா தண்டம் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் நிர்மலானந்தன் அவர்களின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும், கூல்பார், உணவகங்கள், தேநீர்சாலை என்பன தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் கடந்த 10.01.2025ம் திகதி திருநெல்வேலி பகுதியில் கூல்பார்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது கூல்பார் ஒன்றில் திகதி காலாவதியான சோடாக்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனைக்காக வைத்திருந்தமை கண்டறியப்பட்டு, அவை பொது சுகாதார பரிசோதகரால் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து கூல்பார் உரிமையாளரிற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் மேலதிக நீதவான் நீதிமன்றில் 20.01.2025 தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று 25.02.2025ம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. உரிமையாளரிற்கு எதிரான  குற்றச்சாட்டுக்களுக்கு, உரிமையாளரை குற்றவாளி என இனங்கண்ட நீதவான் எஸ். லெனின்குமார் 30,000/= தண்டம் விதித்து தீர்ப்பளித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்