Wed. Jun 10th, 2026

காலாவதியான உணவுப் பொருட்களை நுகர்வோருக்கு விற்பனை செய்த உரிமையாளர்களுக்கு ஒரு லட்சத்து முப்பது மூவாயிரம் ரூபா தண்டம்

பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் காலாவதி கடந்த உணவுப் பொருட்களை நுகர்வோரிற்கு விற்பனை செய்தமை தொடர்பாக
இரு வர்த்தக உரிமைகளுக்கு ஒரு லட்சம் முப்பது மூவாயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

பருத்தித்துறை நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் காலாவதியான உணவுப் பொருட்களை நுகர்வோருக்கு விற்பனை செய்தமை தொடர்பாக பொதுமகன் ஒருவரினால் பருத்தித்துறை நகரசபையினது பொதுச்சுகாதார பரிசோதகரான ப. தினேஷிற்கு தகவல் வழங்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து உடனடியாகவே இரு  வியாபார நிலையங்களிலும் பரிசோதனை மேற்கொண்ட பருத்தித்துறை பொதுச்சுகாதார பரிசோதகர் காலாவதி கடந்த உணவுப்பொருட்களை கைப்பற்றியதுடன் இரு வியாபார நிலைய உரிமையாளரிற்கும் எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது . இவ்வழக்கானது இன்று வெள்ளிக்கிழமை  விசாரணையிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது உரிமையாளர்கள் தம்மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் 133,000 தண்டப்பணம் பருத்தித்துறை நீதிமன்றினால் அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed